கடந்த வருட இறுதியில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று 2 வது முறையாக இந்த வருட ஜனவரியில் பதவி ஏற்றார். அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றின் நிறுவனரும் உலகின் நம்பர் பணக்காரருமான எலான் மஸ்க் என்று அரசியல் நோக்கர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
டிரம்ப் தேர்தல் பிரசாரத்துக்கு எலான் மஸ்க் சுமார் 291 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை நன்கொடையாக வழங்கினார். முன்னதாக டிரம்ப் உடைய குடியரசு கட்சிக்கு எதிராக ஜனநாய கட்சியின் பக்கம் நின்றவர்தான் மஸ்க். ஆனால் தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் மீது கொலை முயற்சி நடந்தது தேர்தலின் போக்கை புரட்டிப் போட்டது.
டிரம்ப் உடைய தன்னபிக்கையை புகழ்ந்து எலான் மஸ்க் குடியரசு கட்சி பக்கம் சாய்ந்தார். டிரம்ப்பின் நெருங்கிய நண்பராவே மாறிய மஸ்க் அவருக்காக பிரச்சாரங்களில் ஈடுபட்டார். வாக்குப்பதிவுக்கு சில வாரங்கள் முன்பிருந்தே நாள் ஒன்றுக்கு ஒரு அதிர்ஷ்டசாலிலுக்கு 1 மில்லியன் டாலர் என வெளிப்படையாக வாக்காளர்களுக்கு பணம் வழங்கினார் மஸ்க். இவை டிரம்ப் வெற்றியில் நிச்சயம் பெரும்பங்கு வகித்தன.
வெற்றிக்கு பின் அதிபர் பொறுப்பேற்ற டிரம்ப் அரசு செயல்திறன் துறை என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு மஸ்க்கை தலைவராகினார். இந்த துறை அரசின் தேவையற்ற செலவுகளை கண்டறிந்து அவரை குறைக்க ஆலோசனை வழங்கியது.
அதன் ஆலோசனையின் பேரில் உலக அமைப்புகளுக்கான பல்வேறு நிதி நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான அமெரிக்க அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இவ்வாறு டிரம்ப் உடைய மூளையாக செயல்பட்ட எலான் மஸ்க் சமீக காலமாக இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்தார். திடீரென அரசு செயல்திறன் துறை தலைவர் பதவியை துறந்தார். தற்போது டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
முக்கியாமாக டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிக்குறைப்பு மசோதாவை மஸ்க் விமர்சித்துள்ளார். செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா முட்டாள்த்தனமானது என்று மஸ்க் கூறுகிறார்.
வளர்ந்த கன்று மார்பில் பாய்வது போல் தன்னை விமர்சித்த மஸ்க்குக்கு எதிராக அவரது நிறுவனத்துக்கு அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் நேற்று டெஸ்லா பங்குகள் 14 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து, சந்தை மதிப்பில் சுமார் 150 பில்லியன் டாலர்களை இழந்தன.
இதற்கிடையே எப்ஸ்ட்டீன் கோப்புகள் எனப்படும், தொழிலதிபர்கள், பெரும்புள்ளிகள் தொடர்புடைய சிறுமிகள் பாலியல் துஷ்ப்ரயோக நெட்வொர்க் தொடர்பான வழக்கில் டிரம்ப்பும் சம்மந்தப்பட்டுள்ளார் என்று எலான் மஸ்க் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். டிரம்ப் மீது ஏற்கனவே பல்வேறு பாலியல் வழக்குகள் உள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு கவனம் பெற்றுள்ளது.


