TamilsGuide

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது டிரம்ப்தான் - புதின் உதவியாளர் பளீர்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாகிஸ்தானில் மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து மே 7 இல் பாகிஸ்தான் - இந்தியா இடையே ஏற்பட்ட மோதல் மே 9 சண்டை நிருத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

இரு நாட்டுக்கு இடையே ஆன சண்டையை வர்த்தகத்தை வைத்து பேசி தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். இதுவரை சுமார் 11 முறை அவர் இவ்வாறு கூறிவிட்டார். ஆனால் இந்தியா அதை மறுத்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் பேசியுள்ளார். இதற்கிடையே இரு நாட்டுத் தலைவர்களும் பேசியது குறித்து புதினின் உதவியாளர் யுரி உஷாகோவ் விளக்கமளித்தார்.

அப்போது பேசிய அவர், "இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் சுமார் 70 நிமிடங்கள் நீடித்தது. ரஷியா - உக்ரைன் மோதலில் தொடங்கியது இந்த உரையாடல். பேச்சுவார்த்தையை முறியடிக்க உக்ரைன் முயற்சித்து வருகிறது.

அப்போது மத்திய கிழக்கு நாடுகள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் பேசினர். அடுத்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் குறித்தும் பேசப்பட்டது. அதிபர் டிரம்பின் தனிப்பட்ட தலையீட்டால் இந்த போர் நிறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். 
 

Leave a comment

Comment