TamilsGuide

நாயகனின் தொடங்கி என் தங்கை கல்யாணியில் முடிகிறது தக் லைப் .

மிக நீளமான திரைப்படமாக எனக்கு பட்டது. இரண்டாம் நாளே மயான அமைதியில் வெறும் ஒரு 30 பேரோடு ஒரு மல்டிப்ளெக்ஸ் அரங்கத்தில் ஒரு பிரபல இயக்குனர் அண்ட் நடிகர் படத்தை பார்ப்பது ஒரு புதிய அனுபவம் .

எமனுடன் போராடும் கதாபாத்திரம் நாயகன். கிட்டத்தட்ட எவெரெஸ்ட் உச்சிக்கே (ஒரு உதாரணம்தான்)அழைத்துச் சென்று பல முறை துப்பாக்கியில் சுட்டு, கீழே தள்ளிவிட்டாலும் புதைந்த பனிக்குவியலில் இருந்து எழுந்து கடும் குளிரில் தள்ளாடி நடந்து வந்து உயிர்பிழைத்து, பின் மார்ஷியல் கலையையும் பயின்று மீண்டு வருபவர். நாயகனில் ஹீரோ என்ன தொழில் செய்கிறார் என்று ஓரளவுக்கு தெரியும். இதில் அதுவும் தெரியவில்லை. ஆளாளுக்கு ஹெலிகாப்டர் எல்லாம் எடுத்து வந்து பறக்கிறார்கள்.

சிம்பு நல்ல நடிகர். அவருக்கு நடிக்க நிறைய வாய்ப்பு. ஆனால் அவருக்கே அவர் கேரக்டர் பற்றி பயங்கர குழப்பம் .

பான் இந்திய படம் ஆதலால் ஹிந்தியின் மகேஷ் மஞ்சரேக்கர் முதல், தெலுங்கு தணிகல பரணி, மலையாளத்தின் ஜோஜு ஜார்ஜ் , பாபுராஜ் வரை அனைத்து மொழி நடிகர்களும் நடித்திருக்கின்றனர்.

மீண்டும் சிறிய தரமான படங்களின் காலம் வரவேண்டும்....! கமல் அவற்றை தயாரிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது!!

Jeeva Nanthan

Leave a comment

Comment