TamilsGuide

தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன்- குவியும் வாழ்த்து

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கில் இருவரும் கருத்துகளையோ, அறிக்கைகளையோ வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். ஒருவரையொருவர் விமர்சித்து பேசிய பதிவுகளையும் சமூக வலைதளங்களில் நீக்கினார்கள். பல்வேறு சர்ச்சைக்கு நடுவில் ரவி மோகன் - கெனிஷா ஜோடி நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக சென்று வருகிறார்கள்.

இதனிடையே, ரவி மோகன் தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். 'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' என்று தனது பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள ரவி மோகன் அதன் லோகோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரவி மோகனுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது கணேஷ் கே.பாபு இயக்கும் 'கராத்தே பாபு' மற்றும் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' ஆகிய இரண்டு படங்களிலும் அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment