TamilsGuide

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உரிழப்பு

மட்டக்களப்பு ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு(05) இடம்பெற்ற கோர விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம் கட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள சந்தியில் நேற்றிரவு 10.00மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் புதிய காத்தான்குடி 06 ஆலிம் வீதி தோணா சந்தி எனும் முகவரியைச் சேர்ந்த அப்துஸ்லாம் அப்துல்லாஹ் எனவும் 21 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

வேன் ஒன்றும் மோட்டார்சைக்கிளும் ஆரையம்பதி 5ம் கட்டை பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் உள்ள சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் இளைஞர் உயிரிழந்ததுடன் மற்றையவர் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment