TamilsGuide

ஒன்ராறியோவில் போதை மருந்து பயன்பாட்டினால் கடந்த ஆண்டு 2231 பேர் மரணம்

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு 2,231 பேர் போதை மருந்து பயன்பாடு காரணமாக உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்ராறியோ மாகாண தலைமை மரண விசாரணை காரியாலயம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15% குறைவாகும். 2023-ஆம் ஆண்டு போதைப் பொருள் பயன்பாட்டு மரணங்கள் 2,639 ஆக காணப்பட்டது.

“முந்தைய ஆண்டைவிட இறந்தோர் எண்ணிக்கை குறைந்திருப்பது சிறிய நம்பிக்கையை தருகிறது.

ஆனால் 2,231 பேர் இறந்திருக்கிறார்கள் என்பதே மிகவும் கவலைக்குரியது,” என தலைமை மரண விசாரணை அலுவலர் டாக்டர் டிர்க் ஹுயர் தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டில் ஒபியாயிட் மரணங்களுக்கான உயிரிழப்பு விகிதம் 100,000 பேருக்கு 14.3 ஆக இருந்தது. இது COVID-19 பெருந்தொற்று உச்சத்தில் இருந்த 2021-ஆம் ஆண்டில் இருந்த 19.4 (உயிரிழப்பு விகிதம்) காட்டிலும் குறைந்துள்ளது.

2021ம் ஆண்டில் போதை மருந்து பயன்பாட்டினால் 2,880 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment