TamilsGuide

DNA படம் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு

அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

இதற்கு முன் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்கு 5 திறமையான இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள்.

டிஎன்ஏ படத்தின் டீசர் கடந்த ஜனவரி 10ம் தேதி படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், டிஎன்ஏ படம் வெளியாகும் தேதியை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

அதன்படி, டிஎன்ஏ திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment