TamilsGuide

உப்புக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க தீர்மானம்

இந்த வாரத்திற்குள் உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலையை (MRP) அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார்.

இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட உப்பை அதிக விலைக்கு விற்க முயல்வதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், உள்ளூர் சந்தையில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாகவே அரசாங்கம் உப்பு இறக்குமதி செய்ய அனுமதித்ததாகவும், இறக்குமதியாளர்கள் இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட அதிக விலைக்கு உப்பு விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை என்றும் கூறினார்.

அத்துடன், இறக்குமதியாளர்கள் ரூ.80 மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உப்பை ரூ.250க்கு விற்க முயற்சிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 

Leave a comment

Comment