பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தக் லைஃப் திரைப்படம் இன்று வெளியாகிறது.
இதனிடையே தக் லைஃப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
படத்தில் அந்த பாடலை தீ பாடிய நிலையில், அவர் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வர இயலாததால் சினமயி அந்த பாடலை மேடையில் பாடினார்.
சின்மயி பாடிய முத்தமழை பாடலுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து 'தக் லைஃப்' ஆல்பத்தில் 10வது பாடலாக சின்மயி வெர்ஷன் முத்தமழை இணைக்கப்பட்டுள்ளது.


