TamilsGuide

அனலைதீவு ஐயனார் ஆலயத்தில் காணாமல் போன பித்தளை கலசங்கள் மீட்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு ஐயனார் ஆலயத்தின் 06 பித்தளை கலசங்கள் காணாமல் போயிருந்தன. இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அந்தவகையில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரனவின் தலைமையிலான குழுவினர் 1ம் திகதி அன்றையதினம் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ததுடன் 06 கலசங்களையும் மீட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment