TamilsGuide

எனக்கு உறுதுணையாக நின்ற தமிழ்நாட்டிற்கு நன்றி - கமல்

மணி ரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தக் லைஃப். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. சென்னை தனியார் கல்லூரியில் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார்.

விழாவில் கமல் பேசும்போது "தமிழ் மொழியில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்" எனக் குறிப்பிட்டார். இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளப்பியது. கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கமல் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், கர்நாடகா மாநிலத்தில் தக் லைஃப் படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கமல் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மறுப்பு தெரிவித்ததால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட அனைவரும் தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்பதில் என்ன சந்தேகம். கன்னடர்கள் உண்மையை ஏற்க மறுக்கிறார்கள் என கமலுக்கு ஆதரவு குரல் கொடுத்தனர்.

இந்த நிலையில் எனக்கு உறுதுணையான நின்ற தமிழ்நாட்டிற்கு நன்றி. உயிரே, உறவே, தமிழே என விழா மேடையில் பேசிய வார்த்தைக்கு முழு அர்த்தத்தை தற்போது புரிந்து கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment