TamilsGuide

தக் லைஃப் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தக் லைஃப் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளதால் கமல் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளது.

இந்நிலையில், நாளை ஒருநாள் மட்டும் தக் லைஃப் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியாக தக் லைஃப் படத்தை கூடுதலாக திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாளை உலகெங்கும் வெளியாகும் இத்திரைப்படம் கர்நாடகாவில் மட்டும் தற்போது வெளியாகவில்லை.

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றி கன்னட மொழி தமிழில் இருந்து தான் பிறந்தது எஎன்று கமல் பேசியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது. இதற்காக மன்னிப்பு கேட்க மறுத்த கமல் கர்நாடகா வெளியீட்டை ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment