TamilsGuide

இந்தியாவின் சிறந்த நடிகர் மோகன்லால் - துடரும் படத்தை பாராட்டிய செல்வராகவன்

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஷோபனா நடித்து `தொடரும்' திரைப்படம் வெளியானது. மோகன்லாலுக்கு இது 360 - வது படம் ஆகும். திரைப்படம் வெளியாகி மாபெரும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. இதுவரை அதிகம் வசூலித்த மலையாள திரைப்படங்களுள் தொடரும் திரைப்படம் முதல் இடத்தில் உள்ளது.

தொடரும் திரைப்படத்தை தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். படத்தை ரெஞ்சித் தயாரித்துள்ளார்.

இப்படம் திரிஷ்யம் திரைப்படத்தை போல் சஸ்பென்ஸ் திரில்லராக அமைந்துள்ளது. திரைப்படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தை பார்த்த இயக்குநர் செல்வராகவன் படக்குழு மற்றும் மோகன்லாலை பாராட்டியுள்ளார்.

அதில் " மிகவும் பிரமாதமான திரைப்படம் தொடரும் , இப்படத்தை மோகன்லாலை தவிர்த்து வேறு யாராலையும் நடித்திருக்க இயலாது. எம்மாதிரியான நடிகன்! இந்தியாவின் சிறந்த நடிகர் மோகன்லால்" என புகழ்ந்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Comment