TamilsGuide

வலம்புரி சங்குடன் ஜா-எலவில் ஒருவர் கைது

ஜா-எல பகுதியில் வலம்புரி சங்கு ஒன்றை 2 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜா-எல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜா-எல நகரில் நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையின் போது சப்புகஸ்கந்தவைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது, அவரிடமிருந்த வலம்புரி சங்கும் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment