TamilsGuide

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது

முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 22 முதல் மே 30 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட வீரர்களில் 2,261 பேர் இராணுவத்தினரும், 194 பேர் கடற்படையினரும், 198 பேர் விமானப்படையினரும் அடங்குவர்.

மேலும், தப்பியோடிய 330 வீரர்கள் மற்றும் அதிகாரிகளையும் இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment