TamilsGuide

கனடாவில் தபால் ஊழியர்கள் போராட்டம்

கனடாவில் தபால் திணைக்களத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டின் 13 நகரங்களில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை தொடர்பில் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளின் அடிப்படையில் தபால் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

கனடாவில் சுமார் 55 ஆயிரம் பணியாளர்கள் தபால் தொழிற்சங்கங்களில் அங்கம் வகிக்கின்றனர். ஆரம்பகட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே தபால் ஊழியர்கள் போராட்டங்கள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் இந்த போராட்டம் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது.

மீண்டும் தற்பொழுது கனடிய தபால் திணைக்களப் பணியாளர்கள் போராட்டத்தில் குதிக்கும் முனைப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை குறித்து கனடிய தபால் திணைக்களம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

தமது உரிமைகள் மறுக்கப்படுவதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட நேரிடுவதாக தபால் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 
 

Leave a comment

Comment