கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல் என்ற நபர் வாங்கிய லாட்டரி சீட்டில் 5 மில்லியன் கனடிய டாலர்களை (சுமார் 30 கோடி ரூபாய்) வென்றார்.
அவருக்கு வங்கிக் கணக்கு கூட இல்லாததால், மேற்கு கனடா லாட்டரி கார்ப்பரேஷன் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், பணத்தை தனது காதலி மெக்கேயின் பெயரில் டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்டார்.
இருவரும் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக உறவில் இருந்ததாகவும், அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் கேம்பல் கூறினார்.
ஊடகங்கள், லாரன்ஸ் அந்த வெற்றியை தனது காதலிக்கு சமர்பித்ததாக புளகாங்கிதத்துடன் செய்தி வெளியிட்டன. அதனபின்னும் இருவரும் பொது இடங்களில் ஒன்றாகவே காணப்பட்டனர்.
இந்நிலையில் லாட்டரி வென்ற சில நாட்களுக்குப் பிறகு, மெக்கே காணாமல் போனதாகவும், எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டதாகவும் காம்ப்பெல் குற்றம் சாட்டியுள்ளார்.
கடைசியாக அவளை வேறொரு ஆணுடன் படுக்கையில் பார்த்ததாக அவர் தெரிவித்தார்.
வேறொருவரின் பெயரில் லாட்டரி உரிமை கோருவது குறித்து தனக்கு தவறான ஆலோசனை வழங்கியதாகக் கூறி, லாட்டரி நிறுவனம் மீதும் கேம்பல் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விதியின் விசித்திரமான நாடகம் என்றும் கேம்ப்பெல்லின் வழக்கறிஞர் நொந்துகொண்டார்.


