TamilsGuide

உலக அழகியாக முடிசூடினார் தாய்லாந்து அழகி

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வென்றுள்ளார்.

72வது உலக அழகி போட்டி இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் சம்மேளன மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த ஆண்டு, 108 போட்டியாளர்கள் உலக அழகி போட்டியில் பங்கேற்றதுடன், அவர்கள் 4 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் 10 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் இலங்கை சார்பாகப் போட்டியிட்ட அனுதி குணசேகர, இறுதி 40 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்திருந்தார். 
 

Leave a comment

Comment