TamilsGuide

அவருடைய இழப்பு பேரிழப்பு - ராஜேஷ் உடலிற்கு அஞ்சலி செலுத்திய ரஜினி

பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 29 ஆம் தேதி காலமானார் . இவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

இவர் 1949 ஆம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்தார்.1979- ஆண்டில் தமிழ் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ் 150-க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.

அவள் ஒரு தொடர்கதை, அந்த 7 நாட்கள்,மெட்டி, என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

மேலும் யூடியூபில் ஓம் சரவண பவ என்ற சேனலின் மூலம் பல ஆன்மிக செய்திகளும், ஆரோக்கிய செய்திகளை , பல மருத்துவர்களை நேர்காணல் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜேஷ் அவர்களது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இன்று ராஜேஷ் உடலிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளரை சந்தித்த ரஜினிகாந்த்

"என்னுடைய நெருங்கிய நண்பர், அவரு பெரிய ஹீரோவோ, நடிகரோ, தயாரிப்பாளரோ கிடையாது. ஆனா அவருடைய உடலுக்கு மாண்புமிகு முதலமைச்சரில் இருந்து பல திரைப்பிரபலங்கள் வரை நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அது அவர் எப்படி வாழ்ந்தார் என்பதற்கான சான்று. அவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது. அடிக்கடி நாங்கள் சந்திப்போம். என் உடல்நிலையில் அதிகம் அக்கறை காட்டுவார். அவருடைய இழப்பு பேரிழப்பு. அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்" என கூறியுள்ளார்
 

Leave a comment

Comment