பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் (B.C.) குறைந்தபட்ச சம்பளம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் 17.85 டொலர்களாக உயர்த்தப்பட உள்ளது. இது தற்போதைய 17.40 டொலர்களாக காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி சம்பளத் தொகை 45 சதத்தினால் உயர்த்தப்பட்டுள்ள தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உயர்வு, குடியிருப்புப் பாதுகாவலர்கள், குடியிருப்பில் வசிக்கும் ஆதரவு பணியாளர்கள், முகாம்களில் பணிபுரியும் தலைவர்கள் மற்றும் ஆப் மூலம் உணவு மற்றும் பயண சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கும் பொருந்தும்.
“பணியாளர்களுக்கு உறுதிப்பாடு வழங்கவும், வணிகங்களுக்கு எதிர்பார்க்கக்கூடிய சூழலை உருவாக்கவும், அரசு குறைந்தபட்ச ஊதியத்தை படிப்படியாக, ஒழுங்காக உயர்த்தி வருகிறது,” என புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, குறைந்தபட்ச ஊதியம் வருடந்தோறும் பணவீக்க அளவுக்கேற்ப தானாகவே உயர்த்தப்படும் அரசின் நான்காவது ஆண்டு உறுதிமொழியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் மாகாணங்களில், பிரிட்டிஷ் கொலம்பிய தற்போது அதிகபட்ச குறைந்தபட்ச ஊதியத்தைக் கொண்டுள்ளது.


