தென்னாபிரிக்காவில் ஆறு வயது மகளைக் கடத்தி விற்பனை செய்த தாய் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனது ஆறு வயது மகளைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தென்னாபிரிக்கப் பெண்ணுக்கும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனித கடத்தல் குற்றச்சாட்டில், பெண்னிற்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கடத்தப்பட்ட சிறுமி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சிறுமியைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


