TamilsGuide

மொழி சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்கவே முடியாது - கமல்ஹாசன் திட்டவட்டம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கமல்ஹாசன் கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று சொன்னது பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து பல கர்நாடக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு கமல் பதிலளிக்கும் வகையில் " கர்நாடகா மீதுள்ள என் அன்பு உண்மையானது. நான் இதற்கு முன் மிரட்டப்பட்டுள்ளேன். என் மீது தவறு இருந்தால் நான் மன்னிப்பு கேட்பேன். அப்படி இல்லை என்றால் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் அது தான் என்னுடைய வாழ்வியல், நன்றி" என தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment