நீர்கொழும்பு, கட்டான பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் 45 போத்தல்களிலிருந்து 33.75 லீட்டர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது, 30 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது 900 லிட்டர் கோடா (05 பீப்பாய்கள்), 02 செப்புத் தாள்கள், 03 எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் ஒரு எரிவாயு அடுப்பு ஆகியவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


