TamilsGuide

பெரிய நீலாவணையில் குடும்பப் பெண் மர்மமான முறையில் மரணம்

பெரிய நீலாவணையில் குடும்பப் பெண்ணொருவர்  அவரது வீட்டில் இருந்து  வெட்டுக் காயங்களுடன் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

37 வயதான குறித்த பெண் இரு பெண்களின் தாய் எனவும் அவரது கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த பெண் மீது கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகளை சேமிக்கும் கருவி  (DVR) கொலையாளியினால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment