TamilsGuide

புதிய சட்டங்களின் மூலம் தொழிலாளர் பாதுகாப்பை ஒன்ராறியோ வலுப்படுத்தவுள்ளது

ஒன்ராறியோ அரசு தொழிலாளர் நலனுக்காகவும் மாநில பொருளாதார வளர்ச்சிக்காகவும் 18 புதிய முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கிய, தொழிலாளர் நலன்சார் ஏழு சட்டம், 2025ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. வேலை மோசடிகளைத் தடுப்பது, வேலையிடப் பாதுகாப்பு மீறல்களுக்கான தண்டங்களைக் கூட்டுவது, கட்டுமானப் பணிகளில் உயிர்காப்புக் கருவிகளை கட்டாயமாக்குவது போன்றவை இச்சட்டத்தின் நோக்கமாக அமையும். இது அபாய நிலையைக் குறைத்து திறன் பயிற்சிக்கான விரைவான அணுகலைப் பரிந்துரைப்பதன் மூலம் பணிக்குறைப்பினால் பாதிப்புக்குள்ளாகும் தொழிலாளர்களுக்கான ஆதரவாக விளங்கும். இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அமைச்சர் விஜய் தணிகாசலம் கருத்துத் தெரிவிக்கும்போது "இந்தச் சட்டம் ஒன்ராறியோவின் உழைக்கும் மக்களுக்கு அவர்கள் பணியிடங்களில் பாதுகாப்பை வழங்குவதுடன் அவர்களுக்கான கண்ணியம் மற்றும் அவர்களுக்கான வாய்ப்பை உறுதி செய்யும்" என்று கூறினார். இச்சட்டம், ஒன்ராறியோ மாநிலத்தை வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், குடும்பத்தை வளர்ப்பதற்கும் சிறந்த இடமாக மாற்றுவதற்கான ஒன்ராறியோ அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
 

Leave a comment

Comment