TamilsGuide

ரவி மோகன் இயக்கத்தில் நடிக்கும் யோகி பாபு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கணேஷ் இயக்கும் கராத்தே பாபு திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இவரது விவாகரத்து வழக்கு சமீபத்தில் பேசும் பொருளாக அமைந்தது.

சில மாதங்களுக்கு முன் நடந்த நேர்காணல் ஒன்றில் ரவி மோகன் அவருக்கு இயக்கத்தில் ஆர்வம் இருக்கிறது எனவும் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்குவேன் என கூறினார். அந்த வகையில் யோகி பாபு நடிப்பில் ரவி மோகன் திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை யோகி பாபு உறுதி செய்துள்ளார். இது ஒரு குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment