TamilsGuide

இறக்குமதி செய்யப்பட்ட 2800 மெட்ரிக் தொன் உப்பு சந்தையில்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 2,800 மெட்ரிக் தொன் உப்பு சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உணவுக்காக இறக்குமதி செய்யப்பட்ட இந்த உப்பு கடந்த 23 ஆம் திகதி நாட்டுக்கு வந்ததாகவும், உள்ளூர் உப்பு விற்பனை முகவர்கள் மூலம் சந்தைக்கு விடுவித்து நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய உப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை உப்பு நிறுவனம் 10,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்து வருவதாகவும், புறக்கோட்டை இறக்குமதியாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட இறக்குமதியாளர்கள் மேலும் 100,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a comment

Comment