TamilsGuide

ஆல்பேர்டாவில் கடும் வெப்ப அலை குறித்து எச்சரிக்கை

கனடாவின் ஆல்பேர்டா மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் உயர் அழுத்த மண்டலத்தால் கடும் வெப்பநிலை நிலவுவதால், கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை இன்று வெப்ப எச்சரிக்கை (Heat Warning) விடுத்துள்ளது.

கால்கரி நகரம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களுக்கு இது பொருந்துகிறது.

ஆனால் பன்ஃப், லெத்பிரிட்ஜ், மெடிசின் ஹாட் போன்ற தெற்குப் பரப்புப் பகுதிகள் தற்போது இந்த எச்சரிக்கையின் கீழ் இல்லை.

அல்பேர்டா, சாஸ்கட்செவன், மனிடோபா ஆகிய மாகாணங்களில் காட்டுத் தீ அபாய அளவீட்டு குறியீடு “மிகவும் உயர்ந்தது” அல்லது “அதிகம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது வெப்பம் மற்றும் வறண்ட நிலமையால் காட்டுத் தீ பரவும் வாய்ப்பு அதிகமுள்ளதை காட்டுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வியாழனன்று, அந்த உயர் அழுத்த மண்டலத்திற்குள் ஒரு வேகமான குறுகிய அலை உருவாகி, தென் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மழை மற்றும் சூறாவளியை ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment