TamilsGuide

ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸை வெளியிடும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் விஷ்ணு விஷால். இவருடைய தம்பி ருத்ரா 'ஓஹோ எந்தன் பேபி' என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தினை விளம்பரப் பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இதில் பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ஓஹோ எந்தன் பேபி' திரைப்படம் வருகிற ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்தது. அதனை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுவார் எனவும் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment