TamilsGuide

200 சிறுவர்- சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை

20 ஆண்டுகளுக்கு மேலாக 299 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கான பிரான்ஸ் நீதிமன்றம், 74 வயதான முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது.

ஜோயல் லெ ஸ்கௌர்னெக் என்ற அறுவை சிகிச்சை நிபுணர் 200 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு நான்கு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

புதிய விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. 1989 முதால் 2014 வரை ஜோயல் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளா். மயக்கமடைந்த அல்லது மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களின் சராசரி வயது 11 ஆகும். இதில் 158 பேர் சிறுவர்கள். 141 பேர் சிறுமிகள் ஆவார்கள்.
 

Leave a comment

Comment