TamilsGuide

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் சீனியர் தலைவர் கொல்லப்பட்டார் - நேதன்யாகு தகவல்

காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் சீனியர் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பேசும்பேது நேதன்யாகு, இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் பட்டியலில் சின்வார் பெயரையும் சேர்த்து தெரிவித்தார்.

முகமது சின்வார், யாஹ்யா சின்வாரின் சகோதரர் ஆவார். யாஹ்யா சின்வார், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர். இவர் கடந்த ஆண்டு இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.
 

Leave a comment

Comment