TamilsGuide

ரயில் சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காதது குறித்து விசாரணை

சுமார் 20 ரயில் சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காதது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்.

இந்த சாரதிகள் குழு பணிக்கு வராததால் அண்மையில் பல ரயில்கள் இரத்து செய்யப்பட வேண்டியிருந்தது என்றும் அவர் கூறினார்.

ரயிலை இயக்க சுமார் 430 சாரதிகள் இருக்க வேண்டும், ஆனால் தற்போது 275 சாரதிகள் மட்டுமே உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரயில் சாரதிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், வரும் ஜூலை மாதம் போட்டி ஆட்சேர்ப்பு தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment