450 கிலோ கிராம் எடையுள்ள ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இலங்கை கடற்படை இரண்டு பல நாள் மீன்பிடி இழுவைப் படகுகளை கைப்பற்றியுள்ளது.
தெற்கு கடற்கரையின் தொலைவில் ஆழ்கடலில் நேற்று (மே 27) மீன்பிடி இழுவைப் படகுகள் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையில் 11 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும், போதைப்பொருட்களும் கைதான நபர்களும் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரகள் மேற்கொண்டு வருகின்றனர்.


