TamilsGuide

இலங்கை வந்தார் போலந்து அமைச்சர்

போலந்து வெளியுறவு அமைச்சர் ரெடொஸ்லாவ் சிகோர்ஸ்கி  மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று  இலங்கைக்கு வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோர் வரவேற்றனர்.

இலங்கை-ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திர மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இன்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்துடன் போலந்து அமைச்சர் ரெடொஸ்லாவ் சிகோர்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகின்றது . சிகோர்ஸ்கி, மே 31 ஆம் திகதி  வரை இலங்கையில் தங்கியிருந்து, பல்வேறு உயர் மட்ட சந்திப்புகள் மற்றும் அதிகாரபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.
 

Leave a comment

Comment