பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் உலகப்புகழ் வாய்ந்த கேன்ஸ் திரைப்பட விழா நடந்தது. கடந்த 13-ம் தேதி தொடங்கி 10 நாட்களாக நடந்து முடிந்தது.
திரைப்பட விழாவின் இறுதியில் சிறந்த இயக்குனருக்கான 'பாம் டி ஓர்' விருது ஈரானிய இயக்குனர் ஜாபர் பனாஹிக்கு வழங்கப்பட்டது. ஈரான் திரைப்பட இயக்குனர் ஒருவர் கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதை வாங்குவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கிடையே, ஈரான் இயக்குனருக்கு கேன்ஸ் திரைப்பட விருது வழங்கப்பட்டதற்கு பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரி 'இது ஒரு விபத்து' என சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.
இந்நிலையில், பிரான்ஸ் மந்திரியின் இந்தக் கருத்துக்கு ஈரான் அரசு கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும் ஈரான் நாட்டுக்கான பிரான்ஸ் வெளியுறவு தூதரை நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


