TamilsGuide

ஒரு மில்லியனை விஞ்சிய சுற்றுலா பயணிகளின் வருகை

2025 மே 25 நிலவரப்படி இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகளின் வருகையானது ஒரு மில்லியனையும் விஞ்சியுள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது.

SLTDA இன் படி, ஜனவரி 01 முதல் மே 25 வரை மொத்தம் 1,006,097 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.

அதேநேரம், மே 01 முதல் 25 வரை மொத்தம் 109,213 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக SLTDA மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை இந்தியாவிலிருந்து பதிவாகியுள்ளது.

அதன்படி, அங்கிருந்து 39,070 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டு மே மாதத்தில் இங்கிலாந்திலிருந்து 7,661 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 7,139 பேரும், ஜெர்மனியிலிருந்து 6,143 பேரும், வங்கதேசத்திலிருந்து 5,637 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 4,917 பேரும், பிரான்சிலிருந்து 4,660 பேரும், அமெரிக்காவிலிருந்து 2,959 பேரும், ரஷ்யாவிலிருந்து 2,950 பேரும், கனடாவிலிருந்து 2,783 பேரும் வந்துள்ளதாக SLTDA மேலும் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment