அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (26) சற்று குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 295.24 ரூபாவாகவும், 303.70 ரூபாவாகவும் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (23) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுதியானது 295.18 ரூபாவாகவும், 303.58 ரூபாவாகவும் உள்ளது.
வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது.
அதே நேரத்தில் வளைகுடா நாணயங்களுக்கு எதிராக அதன் பெறுமதி உயர்ந்துள்ளது.


