யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் 5 குழந்தைகளை தாயொருவர் நேற்று முன்தினம் பிரசவித்துள்ளார்.
யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்த பெண்ணொருவரே 3 ஆண்குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகள் என ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த ஐந்து குழந்தைகளும் தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


