TamilsGuide

வவுனியா, ஓமந்தையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்

வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை டிப்பர் வாகனம் ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குறித்த காரானது யாழ்ப்பாணத்தில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 52வயதுடைய சச்சிதானந்த பிரபாகர குருக்கள் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அவரின் மனைவி 50 வயதுடைய மனைவி மற்றும் 27வயதுடைய மகன் , 70 வயதுடைய மாமனார் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, ஓமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment