TamilsGuide

விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் 3 இடங்களை இலக்கு வைத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ, ஜபோஸ்லேன் பிரதேசத்தில் 10 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , ராஹூல வீதி பகுதியில் 5 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நலையில், மொறட்டுவை , இரத்மலானை மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்த 32,39,மற்றும் 54 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

Leave a comment

Comment