பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. நடிகர் சிம்பு, திரிஷா, கமல்ஹாசன் , அபிராமி என பலரும் படத்தை பற்றி பேசினர். அப்பொழுது கமல்ஹாசன் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜை புகழ்ந்து சில வார்த்தைகள் பேசினார். அதை கேட்ட ஜோஜு ஆனந்தத்தில் கண் கலங்கினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் கூறியதாவது " நான் 30-க்கு மேற்பட்ட இரட்டை வேடங்கள் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன் ஆனால் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுக்கும் உருவத்தில் ஏதோ ஒரு மாறுபாடு இருக்கும். ஆனால் ஜோஜு நடித்த இரட்டா படத்தில் அவர் ஒரு காவல் நிலையத்திற்குள் இரட்டை வேடங்களில் நடித்து இருப்பார். அவர் எந்த ஒரு உருவ மாறுபாடும் இல்லாமல் அதில் நடித்து இருப்பார். நான் பொறாமைப்படும் நடிகர்களுள் ஜோஜு ஒருவர்" என கூறினார்.
இதை கேட்ட ஜோஜு கமலுக்கு நன்றி தெரிவித்து கண் கலங்கினார்.


