'அனிமல்' பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் படம் 'ஸ்பிரிட்'. மிக பிரமாண்டமாக எடுக்க உள்ள இப்படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டு இருக்கிறார். படத்தின் புதிய நாயகியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. படத்தின் நாயகியாக திருப்தி டிம்ரி நடிக்கவுள்ளார்.
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கிய அனிமல் திரைப்படத்தில் திருப்தி டிம்ரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


