TamilsGuide

துமிந்த திசாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பு தொகுதியிலிருந்து பொலிஸாரினால் T-56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க, நீதிமன்ற உத்தரவின்படி சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்(24) அவர் கல்கிஸ்ஸை பதில் நீதவான் சாந்த குமாரகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டிருந்தபோது, அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகள், துமிந்த திசாநாயக்கவை கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்திப் பெற்றுக்கொண்ட மருத்துவ அறிக்கைகளின் பிரகாரம், அவர் நோய்வாய்ப்பட்டிருந்தமையால், அவரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்புமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
 

Leave a comment

Comment