தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெயிட் 2 மற்றும் ஒடேலா 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமன்னா கடைசியாக தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
இந்நிலையில் பிரபல சோப் நிறுவனமான மைசூர் சேண்டல் நடிகை தமன்னாவை அவர்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதற்கு இதை கன்னட மக்கள் கடும் எதிர்த்து தெரிவித்து, " ஏன் கன்னட திரையுலகில் திறமைக்கு பஞ்சமா?உள்ளூர் நடிகையை நியமிக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அம்மாநில அமைச்சர் எம்.பி பாட்டில் " சோப்பை கர்நாடகாவிற்கு அப்பாலும் கொண்டு செல்லவே இந்த முடிவு" என தெரிவித்தார்.
இந்நிலையில், கர்நாடக அரசின் மைசூர் சாண்டல் சோப் பிராண்ட் அம்பாசிடராக ரூ.6.2 கோடிக்கு நடிகை தமன்னா நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் எம்.பியும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திவ்யா ஸ்பந்தனா தனது இன்சாட்க்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "ஒரு பொருள் தரமானதாக இருந்தால் அது தானாகவே விற்பனையாகும். மைசூர் சாண்டல் சோப்பு வளமான பாரம்பரியம் மற்றும் நிலையான தரத்தை கொண்டது.
இந்த சோப்பு ஏற்கனவே வாடிக்கையாளர் மத்தியில் பெரும் புகழையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. ஒரு பொருளை சந்தைப்படுத்த எண்ணிலடங்கா வழிகள் உள்ளன. ஒவ்வொரு கன்னடரும் மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடர் தான்" என்று பதிவிட்டுள்ளார்.


