TamilsGuide

பரவும் போலி ஆபாச வீடியோ- சைபர் கிரைம் போலீசில் நடிகை கிரண் புகார்

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வரும் வருபவர் கிரண் ராத்தோட். கமல், விக்ரம், அஜித் உள்ளிட்டவர்களுடன் நடித்த இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி மொழி ஆல்பம் பாடல்களிலும் நடித்து உள்ளார்.

முன்னணி நடிகையாக திகழ்ந்த கிரண் இப்போது திரையுலகை விட்டு கொஞ்சம் விலகியே இருக்கிறார். இந்த நிலையில், இவரது வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

மார்பிங் மூலம் தனது போலி ஆபாச வீடியோ தயாரித்து பரப்பப்பட்டு வருகிறது. மேலும் போலி ஆபாச வீடியோவை யாரும் ஷேர் மற்றும் டவுன்டோடு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 
 

Leave a comment

Comment