TamilsGuide

270 போதைமாத்திரைகளுடன் யாழில் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இருவர் நேற்றைய தினம்(23) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர்களிடம் இருந்து 270 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 24 வயதுடைய மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் , இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Comment