TamilsGuide

குபேரா படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51ஆவது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.

படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான 'போய்வா நண்பா' வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.

பான் இந்தியா அளவில் உருவாகி உள்ள 'குபேரா' படத்தின்ன ஓ.டி.டி. உரிமையை பிரபல நிறுவனமான அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், 'குபேரா' படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, குபேரா திரைப்படத்தின் டீசர் நாளை மறுநாள், அதாவது வரும் மே 25ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment