‘‘கூப்பிடுவார்கள் சார். ஆனால், நான் சாப்பிட்டுவிட்டுதான் செல்வேன். என்னுடைய ஆதரவைக் காட்டுவதற்குப் போவேனே தவிர, எனக்கு உண்ணாவிரதங்களில் நம்பிக்கை கிடையாது. உண்ணா நோன்பை... நோன்பு இருப்பவர்கள் இருக்கலாம். எனக்கு நோன்பிலேயே நம்பிக்கை இல்லை எனும்போது, நான் எப்படி அதில் கலந்துகொள்ள முடியும்?
பசிக்கும்போது சாப்பிட்டுவிட வேண்டும். இல்லை... அந்தத் தியாகத்தை யாரும் மதிக்கப்போகிறார்களா? ‘நான் செத்துப்போயிடுவேன்’ என்று சொன்னால் ‘ஐயய்யோ... ஒரு கலைஞன் போயிடுவான். அவனை எப்படியாவது காப்பாத்தணும்’ என நினைக்கும் அரசியல்வாதிகள் இங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்? கையைத் தடுத்து, ‘வேணாம் உண்ணாவிரதத்தை நிறுத்திக்கங்க’னு சொல்கிறவர்கள், நிஜமாகவே மனம் உவந்து சொல்கிறவர்கள் யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படி இருக்கையில் எதற்கு நம்மைப் பணயமா வைத்து விளையாட வேண்டும்?
‘சாகும்வரை உண்ணாவிரதம்’ என்று அறிவித்த பொட்டி ஸ்ரீராமலுவை அப்படியே சாகவிட்டபோதே இங்கு உண்ணாவிரதம் செத்துப்போய்விட்டது.”
- விகடன் .


