TamilsGuide

30 ஆண்டுகளாக லொத்தர் பரிசிற்காக காத்திருந்தவருக்கு கிட்டிய அதிர்ஷ்டம்

கனடாவின் நியூமார்கெட் நகரத்தைச் சேர்ந்த மார்க் ஹான்லி என்ற நபர், கடந்த மார்ச் 28 அன்று நடைபெற்ற Lotto Max லொத்தர் சீட்டிலுப்பில் 65 மில்லியன் டொலர் ஜேக்பாட் வென்றுள்ளார்.

இந்த பணப்பரிசு வென்ற விடயம் அனைவரினதும் கவனத்தை ஈன்றுள்ளது.

30 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகள் வாங்கிய வந்த ஹான்லி, எப்போதும் போல சீட்டில் எண்களை சரிபார்க்கும்போது ஏழு எண்களும் பொருந்தியதை கண்டார்.

பெரிய பரிசு வென்றதனை உணர்ந்து பெரு மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த லொத்தர் சீட்டு வெற்றியானது தனது மனைவி பிள்ளைகளுக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக தாம் லொத்தர் சீட்டு விளையாடி வருவதாகத் தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment