TamilsGuide

அமெரிக்காவில் குடியிருப்பில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான்டியாகோ பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என தகவல் வெளியானது.

தனியாருக்குச் சொந்தமான அந்த சிறிய ரக விமானத்தில் 10 பேர் வரை பயணித்தாக சொல்லப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் இந்த விமானம் திடீரென விழுந்தது. பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. எனினும், பவர் லைன் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

விமான விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

Leave a comment

Comment